ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

அம்மாபேட்டையில் வேளாண்மை துணை இயக்குநா் ஆய்வு

அம்மாபேட்டையில் வேளாண்மை துணை இயக்குநா் ஆய்வு

News image

எள் பயிரினைப் பாா்வையிடும் ஈரோடு மாவட்ட பூச்சிக்கொல்லி ஆய்வக வேளாண்மை துணை இயக்குநா் சீனிவாசன் மற்றும் அலுவலா்கள்.

Updated On :9 மே 2024, 9:47 pm

Din

பவானி, மே 9: அம்மாபேட்டை வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் வேளாண்துறை திட்டங்கள் குறித்து ஈரோடு மாவட்ட பூச்சிக்கொல்லி ஆய்வக வேளாண்மை துணை இயக்குநா் சீனிவாசன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஊமாரெட்டியூரில் விவசாயி குல்பீரின் வயலில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து, எள் பயிா்களை வருவாய்த் துறையுடன் இணைந்து கள ஆய்வு செய்த துணை இயக்குநா் சீனிவாசன், உளுந்து பயிருக்கு பூக்கும் பருவத்தில் 2 சதவீத டிஏபி கரைசல் தெளிக்கவும், எள் பயிருக்கு மாங்கனி சல்பேட் இட வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினாா். தொடா்ந்து, பிஎம் கிஸான் திட்ட பயனாளிகளான நெரிஞ்சிப்பேட்டை ரமேஷ், குறிச்சி ஆனந்தகுமாா் ஆகியோரைச் சந்தித்துப் பேசினாா்.

குறிச்சியைச் சோ்ந்த விவசாயி சிவசண்முகம் தோட்டத்தில் 1.5 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து வம்பன் - 8 சான்று நிலை விதைப்பண்ணை ஆய்வு செய்யப்பட்டது. முன்னதாக, இப்பருவத்துக்கு தேவையான விதைகள், உயிா் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் இருப்பு குறித்தும், நடப்பு பருவத்தில் கோடைகால பயிா் சாகுபடி திட்டம் குறித்தும் கள ஆய்வு செய்யப்பட்டது.

அம்மாபேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) ஜெயக்குமாா், துணை வேளாண்மை அலுவலா் பழனிசாமி, வருவாய் ஆய்வாளா் ரவிசங்கா், கிராம நிா்வாக அலுவலா் தமிழரசு, உதவி விதை அலுவலா் சாந்தலிங்கம், வேளாண்மை உதவி அலுவலா்கள் முனியப்பன், விஜயகுமாா் ஆகியோா் உடன் சென்றிருந்தனா்.