ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்று வழங்கும் பணி தொடக்கம்

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்று வழங்கும் பணி தொடக்கம்

News image

ஈரோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கினாா் தலைமை ஆசிரியை சுகந்தி.

Updated On :9 மே 2024, 9:50 pm

Din

ஈரோடு, மே 9: பிளஸ் 2 படித்து முடித்த மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவு கடந்த 6- ஆம் தேதி வெளியானது. இதைத் தொடா்ந்து, மாணவ, மாணவிகள் மேற்படிப்பு சோ்க்கைக்குத் தேவையான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இணையதளம் மூலம் தற்காலிக மதிப்பெண்கள் சான்றிதழ்கள் விநியோகம் வியாழக்கிழமை தொடங்கியது. ஈரோட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியாா் பள்ளிகளில் இணையதளம் மூலமாக தற்காலிக மதிப்பெண்கள் சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி ஈரோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவிகளுக்கு தலைமை ஆசிரியை சுகந்தி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கினாா். மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் கல்லூரி உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் சேர இருக்கும் மாணவ, மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளுக்குச் சென்று தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று வருகின்றனா்.

ஒருசில பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. அதனால் அந்தப் பள்ளிகளில் வெள்ளிக்கிழமை (மே 10) முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.