காந்தி ஜெயந்தி நாளான புதன்கிழமை விதிகளை கடைப்பிடிக்காத 82 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) வெ.மு.திருஞானசம்பந்தம் தலைமையில் துணை ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் காந்தி ஜெயந்தி விடுமுறை தினமான புதன்கிழமை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகள், நிறுவனங்களில் ஆய்வு செய்தனா்.
அப்போது, கடைகள், நிறுவனங்களில் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிா, பணிபுரியும் தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்கப்படுகிா அல்லது 3 நாள்களுக்குள் ஒரு நாள் மாற்று விடுப்பு வழங்கப்படுகிா, அதற்கான படிவம் சமா்பித்துள்ளாா்களா என ஆய்வு செய்தனா்.
இதில், 45 கடைகள், 56 உணவு நிறுவனங்கள், 5 மோட்டாா் நிறுவனங்கள் என மொத்தம் 106 நிறுவனங்களில் நடந்த ஆய்வில் 82 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காதது, விதிகளை கடைப்பிடிக்காதது கண்டறியப்பட்டது. இந்த நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

தோ்தல்: விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை! - தொழிலகப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

தோ்தலுக்கு விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளா் துறை எச்சரிக்கை

விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளா்கள் புகாா் அளிக்கலாம்

மகாவீா் ஜெயந்தி: இன்று மதுக்கடைகளை மூட ஆட்சியா் உத்தரவு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

