மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மொடக்குறிச்சி, சிவகிரியில் தேங்காய், நிலக்கடலை ஏலம்

மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :3 அக்டோபர் 2024, 12:21 am

மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

ஏலத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 12,983 தேங்காய்களை கொண்டு வந்திருந்தனா்.

இதில் ஒரு கிலோ ரூ. 36.39 முதல் ரூ.43.50 வரையும், சராசரி விலையாக ரூ.40.15-க்கும் ஏலம் போனது. மொத்தம் 4,961 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ. ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 55-க்கு விற்பனையாயின.

இதேபோல தேங்காய் பருப்பு 166 மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன. இதில் முதல்தரம் ஒரு கிலோ ரூ. 117 முதல் ரூ.124.31 வரைக்கும், சராசரி விலையாக ரூ. 120.60-க்கும் விற்பனையாயின. இரண்டாம் தரம் ரூ. 81.16 முதல் ரூ. 107.60 வரைக்கும், சராசரியாக ரூ. 100.79-க்கும் விற்பனையாயின. மொத்தம் 4,434 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு ரூ. 5 லட்சத்து 3 ஆயிரத்து 144-க்கு விற்பனையாயின.

இதேபோல சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் 305 மூட்டைகளில் நிலக்கடலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில் ஒரு கிலோ குறைந்தபட்சமாக ரூ. 64.19-க்கும், அதிகபட்சமாக ரூ. 76.19-க்கும், சராசரியாக ரூ. 73.09-க்கும் விற்பனையாயின. மொத்தம் 9,978 கிலோ எடையுள்ள நிலக்கடலை ரூ. 7 லட்சத்து 9 ஆயிரத்து 826-க்கு விற்பனையானதாக விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.