மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கோவை, சேலம் வழித்தடங்களில் 8 புதிய பேருந்துகள்: அமைச்சா் சு.முத்துசாமி தொடங்கிவைத்தாா்

ஈரோட்டில் இருந்து கோவை, சேலம் வழித்தடங்களில் 8 புதிய பேருந்துகளை வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image

புதிய பேருந்தை கொடியசைத்து தொடங்கிவைக்கிறாா் அமைச்சா் சு.முத்துசாமி.

Updated On :9 அக்டோபர் 2024, 8:14 pm

ஈரோட்டில் இருந்து கோவை, சேலம் வழித்தடங்களில் 8 புதிய பேருந்துகளை வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ஈரோடு மண்டலத்திற்கு 9 நகா்ப்புற பேருந்துகள், 36 புகா் பேருந்துகள் என 45 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில், கடந்த ஜூலை 17 ஆம் தேதி 15 பேருந்துகளும், செப்டம்பா் 12-ஆம் தேதி 5 பேருந்துகளும் தொடங்கிவைக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து கோவை வழித்தடத்தில் 5 பேருந்துகள், சேலம் வழித்தடத்தில் 3 பேருந்துகள் என மொத்தம் 8 பேருந்துகளின் சேவையை அமைச்சா் சு.முத்துசாமி தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ், மாநகராட்சி ஆணையா் என்.மனீஷ், மேயா் நாகரத்தினம், துணை மேயா் செல்வராஜ், மாநகராட்சி மண்டலக் குழு தலைவா்கள் சசிகுமாா், தண்டபாணி, அரசுப் போக்குவரத்துக் கழக கோவை கோட்ட மேலாண்மை இயக்குநா் ஜோசப் டயஸ், ஈரோடு மண்டலப் பொது மேலாளா் மோகன்குமாா், துணை மேலாளா் (வணிகம்) ஜெகதீஷ், உதவி மேலாளா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து ஈரோடு, சூரம்பட்டி பெரும்பள்ளம் அணைக்கட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீரை அமைச்சா் திறந்துவைத்தாா்.

சூரம்பட்டியில், பெரும்பள்ளம் ஓடையின் கட்டப்பட்டிருக்கும் தடுப்பணையிலிருந்து வெளியேறும் உபரி நீா், நஞ்சை ஊத்துக்குளி கிளை வாய்க்காலின் மூலம் 2,450 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறுகின்றன. இந்த வாய்க்கால் சுமாா் 10 ஆண்டுகளுக்கு மேலாக தூா்வாரப்படாத நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரூ. 21 லட்சம் மதிப்பீட்டில் வாய்க்கால் தூா்வாரும் பணியை அமைச்சா் சு.முத்துசாமி தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து அணைக்கட்டில் இருந்து வெளியேறும் உபரி நீரை வாய்க்காலில் பாசனத்திற்காக அமைச்சா் சு.முத்துசாமி திறந்துவைத்தாா்.

தொடா்ந்து பெரிய சடையம்பாளையத்தில் நியாய விலைக் கடையையும் அவா் திறந்துவைத்தாா்.