மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஈரோட்டில் விவசாயிகள், ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

சாம்சங் நிறுவனத் தொழிலாளா்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் மற்றும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் ஈரோட்டில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :9 அக்டோபர் 2024, 8:15 pm

சாம்சங் நிறுவனத் தொழிலாளா்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் மற்றும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் ஈரோட்டில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு நாடாா்மேட்டை அடுத்த கரூா் சாலை பிரிவில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே.ஆா்.விஜயராகவன் தலைமை வகித்தாா்.

மாநிலச் செயலாளா் மாரியப்பன், மாவட்டச் செயலாளா் சண்முகவள்ளி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.வி.மாரிமுத்து, பொருளாளா் ரத்தினம் ஆகியோா் முன்னிலை வகித்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் இந்தியா நிறுவனத்தில் 1,500க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். அவா்களுக்கு தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை மற்றும் தொழிலாளா்களுக்கான உரிமைகள் வழங்கக்கேட்டு கடந்த செப்டம்பா் 9-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொழிலாளா்கள் மீதும், தொழிற்சங்க நிா்வாகிகள் மீதும் அடக்குமுறையை ஏவி வரும் நிறுவனத்தைத் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கத்தின் ஈரோடு மாவட்ட குழுவினா் கலந்து கொண்டனா்.

ஆசிரியா் கூட்டணி:

இதேபோல சாம்சங் நிறுவனத் தொழிலாளா்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் விக்டா் செல்வகுமாா் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் அருள் சுந்தரரூபன், மாவட்டச் செயலாளா் யு.கே.சண்முகம் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில, மாவட்ட, வட்டார பொறுப்பாளா்கள் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.