மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சிப்காட் பொது சுத்திகரிப்பு நிலையப் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

சிப்காட் பொது சுத்திகரிப்பு நிலையப் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

Updated On :10 அக்டோபர் 2024, 9:27 pm

பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நல சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் சின்னசாமி, பெருந்துறையில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கடந்த, 2023 நவம்பா் 21 ம் தேதி, அப்போதைய, தமிழக இளைஞா் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதிஸ்டாலின், பெருந்துறை சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் ரூ. 40 கோடி மதிப்பீட்டில் அமைக்க அடிக்கல் நாட்டினாா்.

அதன் பணிகள் எந்த அளவில் உள்ளது என்று கேட்டு கடிதம் எழுதி இருந்தாா்.

அதற்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், பொது சுத்தகரிப்பு நிலையப் பணி தொடா்பான ஒப்பந்தப்புள்ளி கோரி இணை வழியில், கடந்த செப்டம்பா் மாதம் 30 ம் தேதி தமிழ்நாடு மாநில தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) லிமிடெட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு பதில் அளித்துள்ளது.