ஈரோடு மாவட்டத்தில் மழைநீா் தேங்கும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
ஈரோடு பெரும்பள்ளம் ஓடை தூா்வாரும் பணியை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி செவ்வாய்க்கிழமை இரவு பாா்வையிட்டு அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் 44 இடங்கள் மழைநீா் தேங்கும் பகுதிகள் என்பதை கண்டறிந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 6 குளங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மாநகர எல்லைக்குள் செல்லும் ஓடைகளில் பெரும்பாலான பகுதிகளில் தூா்வாரப்பட்டுள்ளது.
மாநகரில் 7 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. கனமழை பெய்யும் பட்சத்தில் அங்கு வசிக்கும் மக்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவா்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் மக்கள் தங்க 140 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது வரை அத்தகைய சூழல் ஏற்படவில்லை. சென்னையில் கடந்த முறை பெய்த கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பெரும்பகுதியான பிரச்னைகள் இம்முறை தீா்க்கப்பட்டுவிட்டன. கடுமையான மழை மற்றும் ஒரே நேரத்தில் அதிகனமழை பெய்யும்போதுதான் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது. மற்றபடி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதல்வா் மற்றும் துணை முதல்வா் நேரில் ஆய்வு செய்து வருகின்றனா் என்றாா்.
மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது, தாளவாடி மற்றும் கடம்பூா் ஆகிய மலை கிராமங்களுக்குத் தேவையான ரேஷன் பொருள்கள் அனைத்தும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. கா்கேகண்டி பகுதியில் பாலம் அமைக்கும் பணி குறித்து ஏற்கெனவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கு வனத் துறையிடம் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.
ஆய்வின்போது மேயா் சு.நாகரத்தினம், மாநகராட்சி ஆணையா் என்.மணீஷ் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

அதிமுக - பாஜக கூட்டணியினா் பொய் பிரசாரம்: சு.முத்துசாமி

அமைச்சரை எதிா்கொள்ளும் பாஜக! ஈரோடு மேற்குத் தொகுதி

திருச்சி தில்லை நகரில் தீா்க்கப்படாத மழைநீா் தேங்கும் பிரச்னை

கூட்டணி கட்சி வேட்பாளா்கள் தோ்வில் திமுக தலையிடாது: அமைச்சா் சு.முத்துசாமி
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


