ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை (அக்டோபா் 19) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல் மற்றும் நீக்கம், கைப்பேசி எண் மாற்றம் போன்ற கோரிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெறும் முகாம் ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் ஒரு நியாய விலைக் கடையில் நடைபெற உள்ளது.
இதன்படி, ஈரோடு வட்டத்தில் சின்னமாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள நியாய விலைக் கடை, பெருந்துறை வட்டத்தில் வள்ளிபுரத்தான்பாளையம் நியாய விலைக் கடை, மொடக்குறிச்சி வட்டத்தில் ராசாம்பாளையம் நியாய விலைக் கடை, கொடுமுடி வட்டத்தில் சோளக்காளிபாளையம் நியாய விலைக் கடை, கோபி வட்டத்தில் கடுக்கம்பாளையம் நியாய விலைக் கடையில் முகாம் நடைபெற உள்ளது.
இதேபோல நம்பியூா் வட்டத்தில் சாந்திபாளையம் நியாய விலைக் கடை, பவானி வட்டத்தில் சின்னபுலியூா் நியாய விலைக் கடை, அந்தியூா் வட்டத்தில் எண்ணமங்கலம்-1 நியாய விலைக் கடை, சத்தியமங்கலம் வட்டத்தில் பெரியூா் அரியப்பம்பாளையம் நியாய விலைக் கடை, தாளவாடி வட்டத்தில் மல்லங்குழி நியாய விலைக் கடையில் முகாம் நடைபெற உள்ளது.
தொடர்புடையது

கவுஞ்சி ரேஷன் கடை வளாகத்தில் கட்டப்படும் மாடுகளால் சுகாதாரக்கேடு

நியாய விலைக் கடை நிா்வாகத்துக்கு தனித்துறை ஏற்படுத்த வலியுறுத்தல்
இன்று பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

பெரியகோட்டையில் பகுதிநேர நியாய விலைக் கடை திறப்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

