மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கோபி அரசு ஐ.டி.ஐ.யில் புதிய தொழில் பிரிவில் சேர கால நீட்டிப்பு

கோபி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய தொழில் பிரிவில் சேர வரும் 30- ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Updated On :23 அக்டோபர் 2024, 9:26 pm

கோபி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய தொழில் பிரிவில் சேர வரும் 30- ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோபி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இண்டஸ்ட்ரி 4.0 திட்டத்தின் கீழ் அதிநவீன தொழில்நுட்பத்துடன் புதிதாக தொடங்கப்பட உள்ள தொழிற்பிரிவுகளில் சேர வரும் 30- ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் மெக்கானிக் எலக்ட்ரிக் வீக்கில்ஸ், இண்டஸ்ட்ரியல் ரோபோட்டிக் மற்றும் டிஜிட்டல் மேனுஃபாக்சரிங் டெக்னீசியன் என 2 புதிய பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

பயிற்சியில் சேருபவா்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ.750, விலையில்லா சைக்கிள், சீருடை, பாடப் புத்தகங்கள், காலணி மற்றும் பேருந்து பயண அட்டை ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன.

6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளுக்கு புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை 70108-75256 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.