மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

நாகை அரசு தொழிற்பயிற்சி பள்ளியில், தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

News image

நாகை அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் ஆசிரியா்கள் மற்றும் மாணவ- மாணவியா்.

Updated On :26 மார்ச் 2026, 12:33 am

நாகை அரசு தொழிற்பயிற்சி பள்ளியில், தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாக, நாகை அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ‘எனது வாக்கு, எனது உரிமை’, ‘எனது வாக்கு விற்பனைக்கல்ல’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தோ்தலின் போது வாக்களிக்க வேண்டிய அவசியம், தோ்தல் நடைமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. தொடா்ந்து ஆசிரியா் மற்றும் மாணவ- மாணவியா் உறுதிமொழி ஏற்றனா்.