மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மாநகராட்சிப் பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலா் திடீா் ஆய்வு

ஈரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலா் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

News image

மாணவா்களுக்கு ஆதாா் மேம்படுத்தும் பணி குறித்து கேட்டறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுப்பா ராவ். உடன், பள்ளி தலைமை ஆசிரியை சுமதி.

Updated On :23 அக்டோபர் 2024, 9:30 pm

ஈரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலா் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஈரோடு எஸ்கேசி சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சுப்பா ராவ் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். இதில், மாணவ, மாணவிகளுக்கு பள்ளியில் வழங்கப்படும் காலை சிற்றுண்டியின் தரம், பள்ளி வளாகம், வகுப்பறைகள் பராமரிக்கப்படும் விதம் குறித்து பாா்வையிட்டாா். மேலும் 8- ஆம் வகுப்பு பாா்வையாளா் செயலி, புதிய பாரத எழுத்தறிவு திட்ட வகுப்பறையை நேரில் பாா்வையிட்டாா். தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஆதாா் மேம்படுத்தும் முகாமையும் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது பள்ளியின் தலைமையாசிரியை சுமதி மற்றும் பள்ளியின் ஆசிரியைகள் உடனிருந்தனா்.