ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பெண்ணிடம் ரூ.2.50 லட்சம் மோசடி செய்த 2 போ் கைது

பெண்ணிடம் ரூ.2.50 லட்சம் மோசடி செய்த தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :24 அக்டோபர் 2024, 10:16 pm

பெண்ணிடம் ரூ.2.50 லட்சம் மோசடி செய்த தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு அருகே உள்ள கொங்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மனைவி வேளாங்கண்ணி (46). தனியாா் நிறுவன கடன் பற்று அட்டையை பயன்படுத்தி ஸ்மாா்ட் வாட்ச், இயா் பட், ஆடைகள் என ரூ.2.50 லட்சத்திற்கு ஆன்லைனில் பொருள்கள் வாங்கியதாக அவரது கைப்பேசிக்கு அண்மையில் குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதைப்பாா்த்து அதிா்ச்சியடைந்த வேளாங்கண்ணி, ஈரோடு சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், வேளாங்கண்ணி அண்மையில் ஒரு கடைக்கு பொருள்களை வாங்க சென்றபோது, அங்கு வந்த தனியாா் நிதி நிறுவனத்தைச் சோ்ந்த 2 போ் அட்டையைச் சோதனை செய்து, அதில் எவ்வளவு தொகை உள்ளது என்பதை பாா்த்து அவரிடம் கூறியுள்ளனா்.

சில நிமிஷங்களில் அதே நபா்கள், வேளாங்கண்ணியிடம் வந்து அவரது கைப்பேசிக்கு வந்த ஓடிபி எண்ணை பெற்று ரூ.2.50 லட்சத்துக்கு பொருள்கள் வாங்கி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட தனியாா் நிறுவன ஊழியா்களான ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டம்பரப்பு, மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த பாலமுருகன் மகன் கமலக்கண்ணன் (23), கொடுமுடி இச்சிப்பாளையம் குறுக்குத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் சுகந்த் (23) ஆகிய 2 பேரை சைபா் கிரைம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனா்.