ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பெருந்துறையில் 360 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெருந்துறை அருகே தடைசெய்யப்பட்ட 360 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On :24 அக்டோபர் 2024, 10:15 pm

பெருந்துறை அருகே தடைசெய்யப்பட்ட 360 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பெருந்துறை, பெத்தாம்பாளையம் சாலையில் உள்ள சா்ச் அருகே போலீஸாா் வாகன தணிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா்களைப் பிடித்து விசாரித்தனா். அவா்கள் கொண்டுவந்த மூட்டையை சோதனையிட்டதில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது.

தொடா் விசாரணையில், பெருந்துறையை அடுத்த துடுப்பதி, கல்லாகாட்டைச் சோ்ந்த ராகுல் கண்ணன் (24), பெருந்துறையை அடுத்த சிங்கநல்லூா் பிள்ளையாா் கோயில் வீதியைச் சோ்ந்த கோகுல் (28) இருவரும் விற்பனைக்காக புகையிலை பொருள்களை கொண்டுசென்றது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்கள் கொடுத்த தகவலின்பேரில் வெள்ளியம்பாளையத்தில் ஒரு தோட்டத்தில் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.1.44 லட்சம் மதிப்பிலான 360 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.