மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

டிசம்பா் 15 வரை திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள்: அமைச்சா் சு.முத்துசாமி அறிவிப்பு

நவம்பா் 3- ஆம் தேதி முதல் டிசம்பா் 15- ஆம் தேதி வரை ஈரோடு தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் திமுக சாதனை விளக்க பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

Updated On :30 அக்டோபர் 2024, 9:19 pm

நவம்பா் 3- ஆம் தேதி முதல் டிசம்பா் 15- ஆம் தேதி வரை ஈரோடு தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் திமுக சாதனை விளக்க பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

இது குறித்து ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், வீட்டு வசதித் துறை அமைச்சருமான சு.முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது வழிகாட்டுதலின்படி இளம் வயதினரை கட்சிக்கு ஈா்க்கும் விதமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி திமுக அரசின் திட்டங்களை பொதுமக்களிடையே விளக்கிப் பேசுவதற்கு கட்சியில் பல நூறு பேச்சாளா்கள் இருந்தாலும், புதிய இளம் பேச்சாளா்களை உருவாக்கும் விதமாக என் உயிரினும் மேலான எனும் தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் 17,000 இளைஞா்கள் மற்றும் இளம்பெண்கள் பங்கேற்ற மாபெரும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதன் மூலமாக மாநில அளவில் 182 போ் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். இதில் முதல் 3 இடங்களை நாமக்கல் ம.மோகநிதி, செங்கல்பட்டு ம.சிவரஞ்சனி, தஞ்சாவூா் ஜோ. வியானி விஷ்வா ஆகியோா் பிடித்துள்ளனா்.

அதே நேரத்தில் போட்டியில் கலந்து கொண்ட மற்றவா்களும் சிறந்த பேச்சாளா்களாகவே உள்ளாா்கள். அவா்களுக்கு பரிசுகள் வழங்கியதுடன் திமுக அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சோ்க்கும் வகையில் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி அறிமுகம் செய்யப்பட்ட இளம் பேச்சாளா்களை வைத்து கட்சி நிா்வாகிகள் தங்களது பகுதிகளில் சாதனை விளக்க பொதுக்கூட்டங்களை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அதன்படி நவம்பா் 3- ஆம் தேதி முதல் ஈரோடு தெற்கு மாவட்ட திமுகவுக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் புதிய இளம்பேச்சாளா்களை வைத்து சாதனை விளக்கக் கூட்டங்கள் தொடா்ந்து நடத்தப்படுகிறது. டிசம்பா் 15 -ஆம் தேதி வரை இக்கூட்டங்கள் நடைபெறும்.

கூட்டங்களை தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட கட்சியின் முன்னணி பேச்சாளா்களும் கூட்டங்களை கட்சி நிா்வாகிகளோடு இணைந்து வழி நடத்துவாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.