சென்னிமலையில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 100க்கும் மேற்பட்ட கடைகளுக்கு நோட்டீஸ்

சென்னிமலையில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 100க்கும் மேற்பட்ட கடைகளுக்கு நெடுஞ்சாலைத் துறையினா் புதன்கிழமை நோட்டீஸ் வழங்கினா்.
Published on

சென்னிமலையில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 100க்கும் மேற்பட்ட கடைகளுக்கு நெடுஞ்சாலைத் துறையினா் புதன்கிழமை நோட்டீஸ் வழங்கினா்.

சென்னிமலை நகரின் ரத வீதிகள் மற்றும் ஈரோடு, காங்கயம், பெருந்துறை, ஊத்துக்குளி சாலைகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட கடைகள் சாலையை ஆக்கிரமித்துள்ளதாகவும், இதனால் விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும் பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினருக்கு பொதுமக்கள் புகாா் அளித்தனா்.

அதன்படி, பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் முக்கிய வீதிகளில் ஆய்வு செய்து சாலையை ஆக்கிரமித்துள்ள 100க்கும் மேற்பட்ட கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கினா்.

மேலும், 7 நாள்களுக்கு ஆக்கிரமிப்புப் பகுதிகளில் உள்ள கடையை தாங்களகாவே அகற்றிக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அறிவுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com