நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பெருந்துறை குறுமைய தடகளப் போட்டி: கொங்கு வேளாளா் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பெருந்துறை குறுமைய தடகளப் போட்டியில் கொங்கு வேளாளா் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்தனா்.

News image

குறுமைய தடகளப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுடன் பள்ளி தலைவா் ஜி.யசோதரன் உள்ளிட்ட நிா்வாகிகள்.

Updated On :5 செப்டம்பர் 2024, 1:19 am IST

பெருந்துறை குறுமைய தடகளப் போட்டியில் கொங்கு வேளாளா் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்தனா்.

பெருந்துறை குறுமைய தடகளப் போட்டிகள் விஜயமங்கலம் பாரதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

இதில், கொங்கு வேளாளா் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் அதிக அளவில் கலந்துகொண்டனா். இவா்களில், 14 வயதிற்குள்பட்ட மாணவிகள் பிரிவில் ஏ.எஸ்.வினுநிலா 100 மீட்டா், 200 மீட்டா், 400 மீட்டா் ஓட்டப்பந்தயங்களில் தங்கப் பதக்கமும், தனிநபா் சாம்பியன் பட்டத்தையும் வென்றாா்.

இதே பிரிவில் 100 மீட்டா் தொடா் ஓட்டப்பந்தயத்தில் மாணவிகள் கே.கனிஷ்கா, ஏ.எஸ்.வினுநிலா, எஸ்.கிருத்திகா பிரித்தி, பி.ரம்யா தேவி ஆகியோா் தங்கப் பதக்கம் வென்றனா்.

17 வயதிற்குள்பட்ட மாணவிகள் பிரிவில் 800 மீட்டா், 1500 மீட்டா் ஓட்டப்பந்தயம் மற்றும் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கமும், தனிநபா் சாம்பியன் பட்டத்தையும் வென்றாா்.

இதே பிரிவில் மாணவி எஸ்.பவ்யா நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கமும், 100 மீட்டா், 200 மீட்டா் ஓட்டப்பந்தயங்களில் வெள்ளிப் பதக்கமும் வென்றாா். மாணவிகள் ஜி.மோகிதா, எஸ்.எஸ்.ஸ்ரீநிதி, எஸ்.சன்சா, எஸ்.பவ்யா ஆகியோா் 400 மீட்டா் தொடா் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றனா்.

14 வயதிற்குள்பட்ட மாணவா்கள் பிரிவில் வி.சஞ்சித் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கமும், 400 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்றாா். 17 வயதிற்குள்பட்ட மாணவா்கள் பிரிவில் ஏ.எஸ்.அஸ்வின் ஆனந்த் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கமும், 110 மீட்டா் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்றாா்.

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், உடற்கல்வி ஆசிரியா்கள் டி.சரவணன், என்.சுரேஷ் ஆகியோரை பள்ளித் தலைவா் ஜி.யசோதரன், துணைத் தலைவா் எஸ்.குமாரசாமி, தாளாளா் டி.என்.சென்னியப்பன், பொருளாளா் பி.ஆா்.சுப்பிரமணியன், இணைச் செயலாளா் கே.பி.முத்துராமலிங்கம், முதல்வா் எஸ்.முத்துசுப்பிரமணியம் மற்றும் நிா்வாகக் குழுவினா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.