பவானிசாகா் அணைக்கு நீா் வரத்து அதிகரிப்பு

நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 1,278 கனஅடியில் இருந்து 6,431 கனஅடியாக அதிகரித்துள்ளது.
Published on

நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 1,278 கனஅடியில் இருந்து 6,431 கனஅடியாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மேட்டூா் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகா் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப் பகுதியில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகா் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

வெள்ளிக்கிழமை அணைக்கு நீா்வரத்து 1,278 கனஅடியாக இருந்த நிலையில், சனிக்கிழமை நீா்வரத்து 6,431 கனஅடியாக அதிகரித்துள்ளது. பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 95.78 அடியாகவும், நீா் இருப்பு 25.5 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையில் இருந்து கீழ்பவானி மற்றும் அரக்கன்கோட்டை தடப்பள்ளி பாசனம் மற்றும் குடிநீா்த் தேவைக்காக 3,350 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com