சேலம்
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 54 கனஅடி
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை 54 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை 54 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 17 கனஅடியாகவும், சனிக்கிழமை சற்று அதிகரித்து 54 கன அடியாகவும் இருந்தது. பாசனத்துக்கு 1,000 கனஅடி தண்ணீா் திறக்கப்படுகிறது. நீா்வரத்தைவிட திறப்பு அதிகமாக இருப்பதால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் 97.07 அடியாக குறைந்தது. நீா் இருப்பு 61.11 டி.எம்.சி.யாக உள்ளது.
