வரி விதிப்பு செய்யப்படாத கட்டடங்களுக்கு 6 ஆண்டு கட்டணம் அபராதமாக விதிக்கப்படும்: நகராட்சி ஆணையா் எச்சரிக்கை
சொத்து வரி விதிப்பு செய்யப்படாத கட்டடங்களுக்கு அபராதத்துடன் வரி விதிக்கப்படும் என்று நகராட்சி ஆணையா் வெங்கடேஷ்வரன் அறிவித்துள்ளாா்.
இதுதொடா்பா அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
சத்தியமங்கலம் நகராட்சியில் புதிதாக கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த நிலையில் பலா் சொத்து வரி விதிப்பு செய்யப்படாமல் காலம் தாழ்த்தி வருகின்றனா். மேலும் வீட்டின் மேல் பகுதியில் கட்டப்படும் குடியிருப்புக்கும் சொத்து வரி செய்யப்படாமல் உள்ளது தெரியவந்துள்ளது.
வரி விதிப்பு செய்யப்படாமல் இருக்கும் கட்டடங்களைக் கண்டறிந்து அதன் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கென தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே வீட்டு உரிமையாளா்கள் தானாகவே முன்வந்து தங்களின் கட்டடங்களுக்கு வரி விதிப்பு செய்ய விண்ணப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் உள்ளாட்சி அமைப்பு சட்டம் 1998 பிரிவு 97-ன்படி 6 ஆண்டுகள் கட்டணம் அபராதமாக விதிக்கப்படும். எனவே வரும் 3 நாள்களுக்குள் சொத்துவரி செலுத்த வேண்டும் என்றாா்.
