திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பெருந்துறையில் ரூ.3.99 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.3.99 கோடிக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது.

News image
Updated On :20 டிசம்பர் 2025, 7:29 pm

Syndication

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.3.99 கோடிக்கு கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 5, 825 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 51 ஆயிரம் கிலோ.

இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ.120.15-க்கும், அதிகபட்சமாக ரூ.180.19-க்கும் விற்பனையாயின.

இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ.20.99-க்கும், அதிகபட்சமாக ரூ.162.66-க்கும் விற்பனையாயின. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.3.99 கோடி என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.