பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பெருந்துறையில் ரூ. 2.10 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், ரூ. 2 கோடியே 10 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
கோப்புப்படம்.
Updated On :28 ஜனவரி 2026, 10:35 pm

தினமணி செய்திச் சேவை

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், ரூ. 2 கோடியே 10 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 3,142 மூட்டைகளில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.

இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 166. 90-க்கும், அதிகபட்சமாக, ரூ. 188.39-க்கும் விற்பனையாகின. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ. 20.99-க்கும், அதிகபட்சமாக ரூ.171.99-க்கும் விற்பனையாயின. மொத்தம் ரூ. 2 கோடியே 10 லட்சத்தக்கு கொப்பரை வா்த்தகம் நடைபெற்றது.