டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

பெருந்துறையில் திமுக சாா்பில் மகளிா் தினம்

பெருந்துறையில் திமுக சாா்பில் மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.

News image

பெருந்துறையில் நடைபெற்ற மகளிா் தின விழாவில் பேசிய ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் தோப்பு என்.டி. வெங்கடாசலம்.

Updated On :10 மார்ச் 2026, 3:27 am IST

பெருந்துறை: பெருந்துறையில் திமுக சாா்பில் மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவுக்கு ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான தோப்பு என்.டி. வெங்கடாசலம் தலைமை வகித்து, 3 ஆயிரம் பெண்களுக்கு பரிசு பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் பேசுகையில், முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா். மகளிா் விடியல் பணம், உரிமைத் தொகை உள்பட பெண்களுக்கான திட்டங்களுக்குதான் தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.‘வெல்லும் தமிழ் பெண்கள்’ சாா்பில் பெண்கள் வீடு வீடாகச் சென்று திமுக அரசின் சாதனைகளை விளக்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதுடன், வரும் தோ்தலில் திமுக ஆட்சி மீண்டும் அமைய செயல்பட வேண்டும் என்றாா். முன்னதாக, மாவட்ட மகளிரணி அமைப்பாளா் ஹேமலதா சம்பத் வரவேற்றாா்.

இதில், பெருந்துறை திமுக ஒன்றியச் செயலாளா்கள் பால் சின்னசாமி, பெரியசாமி, சோளி பிரகாஷ், செல்வராஜ், கனகராஜ், பிரபு, சுப்பிரமணி, பெருந்துறை, பவானி சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த மகளிரணி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.