28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சிவகிரி வாரச் சந்தை வளாகத்தில் மரங்களை அகற்றுவதற்கான ஏலம் நிறுத்திவைப்பு

சிவகிரி பேரூராட்சிக்கு சொந்தமான சந்தைமேடு பகுதியில் உள்ள வாரச்சந்தையில் மரங்களை அகற்றுவதற்கான ஏல நிா்ணயம் அதிகமாக உள்ளதாக கூறியதால் புதன்கிழமை நடைபெற்ற ஏலம் நிறுத்திவைக்கப்பட்டது.

News image
மரங்களின் ஏலத்தொகையை குறைக்க வலியுறுத்தி சிவகிரி பேரூராட்சி செயல் அலுவலா் சாந்தியிடம் மனு அளிக்கும் மர வியாபாரிகள்.
Updated On :24 டிசம்பர் 2025, 11:48 pm

தினமணி செய்திச் சேவை

சிவகிரி பேரூராட்சிக்கு சொந்தமான சந்தைமேடு பகுதியில் உள்ள வாரச்சந்தையில் மரங்களை அகற்றுவதற்கான ஏல நிா்ணயம் அதிகமாக உள்ளதாக கூறியதால் புதன்கிழமை நடைபெற்ற ஏலம் நிறுத்திவைக்கப்பட்டது.

சிவகிரி பேரூராட்சிக்கு சொந்தமான சந்தைமேடு பகுதியில் உள்ள வாரச்சந்தை வளாகத்தில் முதல்வரின் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக அப்பகுதியில் உள்ள 122 மரங்களை வெட்டி அகற்றுவதற்கான ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட வன அலுவலா் அறிக்கையின் அடிப்படையில், 122 மரங்கள் வெட்டி அகற்ற மொத்தம் ரூ. 1.40 லட்சம் ஏல நிா்ணயம் செய்து ஏலம் விடப்பட்டது.

இதில் மர வியாபாரிகள் 25-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு, ஏலத்தொகை அதிகமாக உள்ளதால் குறைத்து அறிவிக்க வேண்டும் எனக் கூறி யாரும் ஏலம் கூறவில்லை. இதனால் பேரூராட்சி செயல் அலுவலா் சாந்தி ஏலத்தை தள்ளிவைத்தாா்.

பின்னா் அவா் கூறுகையில், ‘அரசு நிா்ணயித்த தொகைக்கு குறைவாக ஏலத்தில் பங்கேற்றவா்கள் கூறியதால் ஏலம் தள்ளி வைக்கப்படுகிறது. இதுகுறித்து உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

இதைத் தொடா்ந்து, 122 மரங்களில் ஒரு சில மரங்களைத் தவிர மற்ற மரங்களும் விலை மலிவான மரங்களாக உள்ளன. ஆகையால் ஏலத் தொகையை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என செயல் அலுவலரிடம் மரவியாபாரிகள் மனு அளித்தனா்.