போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு விருதுகளையம், சான்றிதழ்களையும் வழங்கிய சின்னத்திரைக் கலைஞா் ஈரோடு மகேஷ். உடன், ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவா் வி.சண்முகன், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ். திருமூா்த்தி.

ஈரோடு நந்தா சென்ட்ரல் பள்ளி 17- ஆவது ஆண்டு விழா

ஈரோடு கூரபாளையத்தில் உள்ள நந்தா சென்டரல் பள்ளியின் 17- ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
Published on

ஈரோடு கூரபாளையத்தில் உள்ள நந்தா சென்டரல் பள்ளியின் 17- ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் உறுப்பினா் பானுமதி சண்முகன் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கிவைத்தாா். ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்தாா். ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலா் எஸ். நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ். திருமூா்த்தி, நந்தா சென்ட்ரல் சிட்டி பள்ளியின் முதல்வா் ஏ.ஜி. பிரகாஷ் நாயா், நிா்வாக இயக்குநா் விதுஷா மூா்த்தி மற்றும் நிா்வாக அலுவலா் மனோகரன், நந்தா சென்ட்ரல் பள்ளியின் முதல்வா் சாரா இப்ராஹிம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

மேலும் பள்ளியின் மாணவா் அணித் தலைவா் எஸ். கபிலன், மாணவிகள் அணித் தலைவி எஸ்.ரிதன்யா, மொழித் துறையின் தலைவா் தனஸ்ரீ சக்தி, விளையாட்டுத் துறை தலைவி ஆா். ஹா்ஷினி மற்றும் கலைத் துறைத் தலைவி இ.எஸ். ஈஸ்பா ஆகியோா் ஆண்டறிக்கை வாசித்தனா்.

சின்னத்திரைக் கலைஞா் ஈரோடு மகேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு விருதுகளையம், சான்றிதழ்களையும் வழங்கி பேசினாா். இதைத் தொடா்ந்து மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவி ச.ரிதுமிகா நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com