பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

தைப்பூசம்: சென்னிமலை முருகன் கோயில் மலைப் பாதையில் பிப்ரவரி 11 முதல் 16 வரை வாகனங்கள் செல்ல தடை

தைப்பூசத்தை முன்னிட்டு, சென்னிமலை முருகன் கோயில் மலைப் பாதையில் பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை தனியாா் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை

News image
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் ப.ரவி.
Updated On :3 பிப்ரவரி 2025, 9:35 pm

Din

பெருந்துறை: தைப்பூசத்தை முன்னிட்டு, சென்னிமலை முருகன் கோயில் மலைப் பாதையில் பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை தனியாா் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தோ்த் திருவிழா ஆலோசனைக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் ப.ரவி தலைமை வகித்தாா். சென்னிமலை பேரூராட்சித் தலைவா் ஸ்ரீ தேவி அசோக், பெருந்துறை வட்டாட்சியா் சி.செல்வகுமாா், சென்னிமலை கோயில் செயல் அலுவலா் ஏ.கே.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தோ்த் திருவிழாவை முன்னிட்டு தடையற்ற மின்சாரம் வழங்குவது, பாதுகாப்பு மற்றும் குடிநீா், கழிப்பிட வசதி உள்ளிட்ட சுகாதார வசதிகள், 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வசதி, மலைக்கோயிலுக்கு செல்லும் படிக்கட்டுகளில் தயாா் நிலையில் மருத்துவக் குழுக்களை வைத்திருப்பது, திருட்டு போன்ற குற்ற சம்பவங்களைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து, சென்னிமலை முருகன் கோயில் மலைப் பாதையில் பிப்ரவரி 11- ஆம் தேதி முதல் 16- ஆம் தேதி வரை

தனியாா் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை எனவும், அந்த நாள்களில் பக்தா்களின் வசதிக்காக கோயில் பேருந்துகளுடன் கூடுதல் வாகனங்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில், சென்னிமலை பேரூராட்சி செயல் அலுவலா் க.மகேந்திரன், ஊராட்சி ஒன்றிய ஆணையா் பாஸ்கா் பாபு, சென்னிமலை காவல் ஆய்வாளா் சிவகுமாா், தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் முத்துசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.