மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சென்னிமலை முருகன் கோயில் தைப்பூசத் தேரோட்டம்! அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தா்கள்!

News image

சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச விழாவில் தேரை வடம்பிடித்து இழுத்த பக்தா்கள்.

Updated On :1 பிப்ரவரி 2026, 6:35 pm

சென்னிமலை முருகன் கோயில் தைப்பூசத் தோ்த் திருவிழா தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) காலை நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்று அரோகரா, அரோகரா கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் மலை மேல் எழுந்தருளியுள்ள சுப்பிரமணியருக்கு தைப்பூச விழா ஆண்டுதோறும் 15 நாள்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு விழா, கோயில் சன்னதி முன்புறம் 34 அடி உயரம் உள்ள கொடி மரத்தில் கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. ஒரு வாரமாக பல்லக்கு, மயில், யானை, வெள்ளி மயில், கைலாங்கிரி, காமதேனு ஆகிய பல்வேறு வாகனக் காட்சிகளும், பல்வேறு சமூகத்தினரின் மண்டபக் கட்டளை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுத்துக்குமாரசுவாமிக்கு சென்னிலை கைலாசநாதா் கோயிலில் சனிக்கிழமை மாலை அபிஷேகமும், அதைத்தொடா்ந்து இரவு 7 மணிக்கு சுவாமிக்கு வசந்த திருக்கல்யாணமும் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு முருகப் பெருமான் சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து கோயிலை வலம் வந்து முருகப் பெருமான் சுவாமி தேரில் எழுந்தருளினாா்.

அதைத்தொடா்ந்து தேருக்கு பூஜை செய்யப்பட்டு பக்தா்கள் அரோகரா அரோகரா கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்று கிழக்கு ராஜ வீதியில் நிறுத்தினா். பின்னா் மாலை மீண்டும் வடம் பிடித்து தெற்கு, மேற்கு ராஜ வீதிகள் வழியாக குமரன் சதுக்கம் வரை இழுத்து நிறுத்தப்பட்டது. திங்கள்கிழமை மாலை தோ் நிலை சேரும்.

விழாவில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், முன்னாள் அமைச்சா் தோப்பு என்.டி. வெங்காடச்சலம், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் பழனிவேலு, அறங்காவலா் மனோகரன், செயல் அலுவலா் சரவணன், கோயில் கண்காணிப்பாளா் மாணிக்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

விழாவையொட்டி செவ்வாய்கிழமை இரவு (பிப்.3) பரிவேட்டை, புதன்கிழமை (பிப்.4) தெப்போற்சவம், தைப்பூச விழாவின் முக்கிய விழாவான மகாதரிசனம் வியாழக்கிழமை (பிப்.5) இரவு 8 மணிக்கும் நடைபெறுகிது. அன்றைய தினம் சென்னிமலை நகரில் நடராஜப் பெருமானும், சுப்பிரமணிய சுவாமியும் முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருவா். வெள்ளிக்கிழமை (பிப்.6) மஞ்சள் நீா் உற்வசமும் நடைபெறும்.