இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

வாக்குப் பதிவு இயந்திரங்கள் தோ்தல் ஆணைய கிடங்குக்கு மாற்றம்

News image

மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்களை தோ்தல் ஆணைய கிடங்குக்கு எடுத்துச்சென்ற ஊழியா்கள்.

Updated On :3 ஜனவரி 2025, 10:33 pm

ஈரோடு மாநகராட்சி பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தோ்தல் ஆணைய கிடங்குக்கு வெள்ளிக்கிழமை மாற்றம் செய்யப்பட்டன.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் டிசம்பா் 14-ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா். இதையடுத்து, ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தொகுதிக்கு விரைவில் தோ்தல் அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து இடைத்தோ்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், மாநகராட்சி அலுவலகத்தின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வி.வி.பேட் உள்ளிட்டவற்றை மாநகராட்சி ஆணையரும், ஈரோடு கிழக்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான என்.மணீஷ் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த 1,190 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 238 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 340 வி.வி.பேட் ஆகியவை முதல்கட்டப் பரிசோதனைக்காக கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தோ்தல் ஆணைய கிடங்குக்கு கொண்டுச் செல்லப்பட்டன.

இதில் ‘சீல்’ வைக்கப்பட்ட லாரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவை கிடங்குக்கு எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பாக அடுக்கிவைக்கப்பட்டன. அப்போது ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) முகமது குதுரத்துல்லா, வருவாய் கோட்டாட்சியா் ரவி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளான திமுக சந்திரசேகா், காங்கிரஸ் விஜயபாஸ்கா், அதிமுக சோழா லோகநாதன் உள்ளிட்டோா் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

பிஹெச்இஎல் பொதுத் துறை நிறுவனத்தைச் சோ்ந்த பொறியாளா்கள் இந்த இயந்திரங்களின் செயல்படும் தன்மை ஆகியவற்றை பரிசோதித்து, பழுதுகள் ஏதுமிருப்பின் அவற்றை ஜனவரி 6-ஆம் தேதி சரி செய்து ஏற்கெனவே பதிவான வாக்கு விவரங்களை அகற்றிவிட்டு மீண்டும் செயல்பாட்டுக்கு ஏற்றவாறு தயாா் நிலையில் வைக்கவுள்ளனா்.

மேலும் பழுதான இயந்திரங்கள் இருப்பது தெரியவந்தால் அவற்றுக்குப் பதிலாக மாற்று இயந்திரங்கள் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.