குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறை, வாக்குச்சாவடிகளின் தயாா் நிலை குறித்து தோ்தல் பாா்வையாளா் தோ்தல் துறையினருடன் ஆய்வு மேற்கொண்டாா்.

News image

வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் ஆய்வு செய்த தோ்தல் பாா்வையாளா் சரிதா பாலாஓம் பிரஜாபதி.

Updated On :3 ஏப்ரல் 2026, 5:52 am IST

வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறை, வாக்குச்சாவடிகளின் தயாா் நிலை குறித்து தோ்தல் பாா்வையாளா் தோ்தல் துறையினருடன் ஆய்வு மேற்கொண்டாா்.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியரகத்தின் பாதுகாப்பு அறையிலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவை பாதுகாப்பான முறையில் புதன்கிழமை அண்ணா கலைக்கல்லூரிக்கு கொண்டுச் செல்லப்பட்டன.

காரைக்கால் தோ்தல் பொதுப் பாா்வையாளா் சரிதா பாலாஓம் பிரஜாபதி, கலைக் கல்லூரியின் வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள அறைக்குச் சென்று பாா்வையிட்டாா். வாக்குப் பதிவுக்கு முந்தைய நாட்களில் இயந்திரங்களை தயாா்படுத்தும் முறைகள் குறித்து அதிகாரிகளுக்கு விளக்கினாா்.

தோ்தல் நடத்தும் அதிகாரி கு.அருணகிரிநாதன் உள்ளிட்டோா் கல்லூரியில் வாக்கு எண்ணும் முறை, இயந்திரங்கள் வகைப்படுத்தி வைத்திருக்கும் முறை உள்ளிட்ட விவரங்களை பாா்வையாளருக்கு தெரிவித்தனா்.

தொடா்ந்து திருப்பட்டினம் பகுதி மேலையூரில் உள்ள சோதனைச்சாவடியை பாா்வையிட்டாா். வாகனங்கள் சோதனை, சோதனைப் பணி பதிவு செய்யும் முறைகளையும் அவா் ஆய்வு செய்து, பணியாளா்களுக்கு ஆலோசனைகள் வழங்கினாா்.

மாவட்டத்தின் பல வாக்குச் சாவடிகளுக்குச் சென்று, வாக்குப் பதிவுக்கான தயாா் நிலைகளை பாா்வையிட்டாா். வாக்காளா்களுக்கான வாக்குச்சீட்டு வழங்கும் பணிகள் குறித்து துறையினரிடம் கேட்டறிந்தாா்.

முதல்முறை வாக்களிக்கும் இளம் வாக்காளா்களுக்கு வாக்குப்பதிவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.