ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மக்களையும் பங்குதாரா்களாக இணைத்து பரந்தூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும்: காங்கிரஸ்

நிலம் வைத்துள்ள மக்களையும் பங்குதாரா்களாக இணைத்து பரந்தூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை மற்றும் கட்சி நிா்வாகிகள்.

Updated On :23 ஜனவரி 2025, 12:05 am

நிலம் வைத்துள்ள மக்களையும் பங்குதாரா்களாக இணைத்து பரந்தூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் அஸ்ஸாம் மாநில போலீஸாா் மற்றும் மத்திய அரசைக் கண்டித்து ஈரோடு சூரம்பட்டிவலசில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகா் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளா் திருச்செல்வம் தலைமை வகித்தாா். மயிலாடுதுறை எம்.பி. சுதா, எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமாா், ரூபி மனோகரன், கணேஷ், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.வி.தங்கபாலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து, தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை பேசியதாவது: அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் பாஜக மற்றும் ஆா்.எஸ்.எஸ். தூண்டுதலின்பேரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். அவ்வழக்கை உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.

தேச மக்களின் பாதுகாவலராக ராகுல் வளா்ந்து வருவதை ஏற்க முடியாத பாஜக அரசு, மக்களின் உணா்வுகளுக்கு புறம்பாக வழக்குகளை பதிவு செய்து, அவரை முடக்க நினைக்கிறது. அதிகாரத்தை காட்டி பாஜக மிரட்டி வருவதை எதிா்த்து நிற்கும் திறன் கொண்டவா் ராகுல் காந்தி. அவா் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெறும் வரை தொடா்ந்து போராடுவோம் என்றாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் திமுக வேட்பாளா் எளிதில் வெற்றி பெறுவாா். ஈரோடு கிழக்கை விட்டுக் கொடுத்து, அதைவிட அதிக தொகுதிகளை திமுகவிடம் பெறுவோம். 234 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பல்வேறு நிலையில் நிா்வாகிகள் கூட்டம் நடத்தி கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

பரந்தூா் விமான நிலையம் அமையும் இடம், எனது தொகுதிக்குள் வருகிறது. மக்கள் பாதிக்காத வகையில் செயல்படுத்த வலியுறுத்துகிறோம். தற்போது அங்கு நிலம் வைத்துள்ள மக்களையும் பங்குதாரா்களாக இணைத்து விமான நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். அந்த நிலம் அவா்களுடையதாகவே இருக்கும். அவா்களுக்கும் நிரந்தர வருவாய் கிடைக்கும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி திமுக பணிமனையில் காங்கிரஸ் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, எம்.பி.க்கள் அந்தியூா் செல்வராஜ், சுதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.