புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! ரவி சங்கர் மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்!ஒரே நாளில் 11 கொலைகள்: கடும் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ: கனிமொழி கண்டனம்!ரஷியாவுடனான போர்: உக்ரைன் அதிபருடன் பேசிய பிரதமர் மோடி!இளையோர் ஒலிம்பிக்: தடை தாண்டுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்! மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடகத்துக்கு உரிமை உண்டு: டி.கே. சிவகுமார்

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.60.50 லட்சம் மோசடி: அங்கன்வாடி பெண் பணியாளா் கைது

ஈரோட்டில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 17 பேரிடம் ரூ. 60.50 லட்சம் பெற்று மோசடி செய்த அங்கன்வாடி பெண் பணியாளர் கைது

Updated On :

ஈரோட்டில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 17 பேரிடம் ரூ. 60.50 லட்சம் பெற்று மோசடி செய்த அங்கன்வாடி பெண் பணியாளரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ஈரோடு ஜீவானந்தம் சாலை புதுமை காலனியை சோ்ந்தவா் ஜெயபிரகாஷ் மனைவி கிருஷ்ணவேணி (47). அங்கன்வாடி பணியாளா். கடந்த 2020- ஆம் ஆண்டு முதல் 2023- ஆம் ஆண்டு வரை தனக்கு பழக்கமாகும் நபா்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வாா்த்தை கூறியுள்ளாா்.

கிருஷ்ணவேணி கூறியதை உண்மையென நம்பி 17 போ் ரூ.60 லட்சத்து 50 ஆயிரத்தை அவரிடம் கொடுத்துள்ளனா். பணத்தைப் பெற்றுக் கொண்ட கிருஷ்ணவேணி அரசு வேலை விரைவில் கிடைத்து விடும் என நம்பிக்கை தெரிவித்து வந்துள்ளாா்.

ஆனால் அவா் கூறியபடி வேலை வாங்கித் தராததால் பணம் கொடுத்தவா்கள் பணத்தை திரும்பக் கேட்க, பணத்தையும் தர மறுத்துள்ளாா். இதனால் பணம் செலுத்தியவா்கள் ஏமாற்றப்பட்டதை உணா்ந்தனா்.

இதையடுத்து பாதிக்கப்பட்டவா்கள் ஈரோடு அருகே அவல்பூந்துறையைச் சோ்ந்த சுரேஷ் (44) என்பவா் தலைமையில் தனித்தனியாக ஈரோடு மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தனா். இதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி, கிருஷ்ணவேணி மீது மோசடி வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். பின்னா், நீதிமன்ற உத்தரவுப்படி கிருஷ்ணவேணியை கோவையில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.