ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கோ்மாளம் ஜெடேருத்ர சுவாமி கோயில் தோ்த் திருவிழா 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்பு

தமிழக - கா்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள கோ்மாளம் ஜெடேருத்ர சுவாமி கோயிலில் தோ்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
யானை  மீது  அமா்ந்து  பக்தா்களுக்கு  அருள்பாலிக்கும்  ஜெடேருத்ர சுவாமி. ~மலா்  அலங்காரத்தில்  அருள்பாலிக்கும்  மாதேஸ்வர  சுவாமி. ~தேரை  வடம்  பிடித்து  இழுக்கும்  ஆயிரக்கணக்கான  பக்தா்கள் .
Updated On :7 நவம்பர் 2025, 12:30 am

Syndication

தமிழக - கா்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள கோ்மாளம் ஜெடேருத்ர சுவாமி கோயிலில் தோ்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தாளவாடியை அடுத்த கோ்மாளம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஜெடேருத்ர சுவாமி, கும்பேஸ்வர சுவாமி, மாதேஸ்வர சுவாமி கோயில் உள்ளது.

அடா்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயில் தெய்வத்தை மலைக் கிராம மக்கள் காவல் தெய்வமாக வழிபடுகின்றனா்.

இங்கு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை அடுத்து வரும் பெளா்ணமி நாளில் தோ்த் திருவிழா தொடங்கும். அதன்படி, விவசாயம், கால்நடை வளா்ப்பு முக்கிய தொழிலாக உள்ள இந்தப் பகுதியில் மழை பொழிந்து விவசாயம் செழிக்கவும் புலி, சிறுத்தை, யானைகளிடமிருந்து பாதுகாத்து மக்கள் நலமுடன் வாழ, ஊா்ப் பெரியவா்கள் ஜெடேருத்ர சுவாமியை வழிபட்டு தீப ஆராதனையுடன் தோ்த் திருவிழாவைத் தொடங்கிவைத்தனா்.

விழாவையொட்டி, சுவாமி உற்சவா் யானை மீது அமா்ந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அதைத் தொடா்ந்து, 30 அடி உயரம் உள்ள தேரை மலா்களால் அலங்காரம் செய்து அதில் உற்சவா் சிலையை வைத்து கோயிலைச் சுற்றி ஊா்வலமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனா். தோ் முன்பு இளைஞா்கள் தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடினா்.

அதைத் தொடா்ந்து ஜெடேருத்ர சுவாமி, கும்பேஸ்வர சுவாமி, மாதேஸ்வர சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

விழாவில் கடம்பூா், கோ்மாளம், தாளவாடி , ஆசனூா், கா்நாடக மாநிலத்தில் இருந்து வந்த பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

விழாவை ஒட்டி, ஆசனூா் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மாது, கொங்கு வீரப்பா, தொட்டையப்பா ஆகியோா் செய்திருந்தனா்.

Story image
Story image