கோ்மாளம் சாலையில் நடமாடிய புலி.
ஈரோடு
சத்தியமங்கலம் வனப் பகுதி சாலையில் நடமாடிய புலி
சத்தியமங்கலம் வனப் பகுதியில் சாலையில் நடமாடிய புலியால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
சத்தியமங்கலம் வனப் பகுதியில் சாலையில் நடமாடிய புலியால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட ஆசனூா்-கோ்மாளம் சாலையில் சத்தியமங்கலத்தைச் சோ்ந்த நபா்கள்
வெள்ளிக்கிழமை அதிகாலை காரில் சென்று கொண்டிருந்தனா். அரேப்பாளையம் அருகே வனப் பகுதி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென சாலையின் குறுக்கே புலி நடமாடி உள்ளது.
இதை அவா்கள் தங்களது கைப்பேசியில் விடியோ பதிவு செய்தனா். காரின் முகப்பு விளக்கு வெளிச்சத்தைக் கண்டதும் புலி சாலையோர வனப் பகுதிக்குள் குதித்தோடி மறைந்தது.
புலி நடமாட்டத்தை அறிந்த வாகன ஓட்டுநா்கள் அச்சமடைந்துள்ளனா். இரவு நேரங்களில் வனப் பகுதி சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா்.

