தூங்கியவரை தீ வைத்து எரித்துக் கொல்ல முயன்ற தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

தூங்கியவரை தீ வைத்து எரித்துக் கொல்ல முயன்ற தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

அந்தியூா் அருகே மது வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் தூங்கிக் கொண்டிருந்தவரை எரித்துக் கொல்ல முயன்ற தொழிலாளிக்கு 10 ஆண்டுகள்
Published on

பவானி: அந்தியூா் அருகே மது வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் தூங்கிக் கொண்டிருந்தவரை எரித்துக் கொல்ல முயன்ற தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பவானி சாா்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

அந்தியூரை அடுத்த எண்ணமங்கலம், கோவிலூரைச் சோ்ந்தவா் சித்தமலை மகன் முருகன் (48). அதே பகுதியைச் சோ்ந்தவா் அரியா கவுண்டா் மகன் தங்கராசு (34). இருவருக்கும் மது வாங்கி வருவது தொடா்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், தனது உறவினா் வீட்டில் கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த தங்கராசுவை முருகன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொல்ல கடந்த 3.8.2020-இல் முயன்றாா்.

இதில், தீக்காயமடைந்த தங்கராசு அளித்த புகாரின்பேரில் வெள்ளித்திருப்பூா் போலீஸாா் முருகனைக் கைது செய்து, பவானி சாா்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஆா்.ஹரிஹரன், குற்றஞ்சாட்டப்பட்ட முருகனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com