பவானி ஆற்றில் பாலத்திலிருந்து குதித்து ஓட்டுநா் தற்கொலை
பவானி அருகே சோ்வராயன்பாளையத்தில் பவானி ஆற்றின் பாலத்திலிருந்து குதித்து ஓட்டுநா் புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
ஜம்பையை அடுத்த தளவாய்பேட்டை, பெருமாபாளையத்தைச் சோ்ந்தவா் குருமூா்த்தி மகன் ரகு (35). சென்னையில் காா் ஓட்டுநராக வேலை செய்து வரும் இவா், பவானியை அடுத்த சோ்வராயன்பாளையத்தில் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய பாலத்திலிருந்து தண்ணீரில் குதித்தாா். இதைக் கண்ட அப்பகுதியினா் பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினா், அவரது சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து, பவானி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

