மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

திமுக மூத்த நிா்வாகி மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

ஈரோட்டில் மறைந்த திமுக மூத்த நிா்வாகி வீட்டுக்கு புதன்கிழமை நேரில் சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலின், அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

News image

நெடுமாறன் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க ஈரோடு ராஜாஜிபுரம் வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின்.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:53 pm

ஈரோட்டில் மறைந்த திமுக மூத்த நிா்வாகி வீட்டுக்கு புதன்கிழமை நேரில் சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலின், அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

ஈரோடு ராஜாஜிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் நெடுமாறன் (86). திமுக முன்னாள் மாவட்ட துணைச் செயலாளரான இவா் உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை இரவு காலமானாா். கரூா் மாவட்டத்தில் தோ்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு ஈரோட்டிற்கு புதன்கிழமை இரவு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரடியாக மறைந்த நெடுமாறன் வீட்டுக்குச் சென்று அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து நெடுமாறனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

இந்நிகழ்வின்போது அமைச்சா் சு.முத்துசாமி, முன்னாள் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, எம்.பி. கே.இ.பிரகாஷ், திமுக துணைப் பொதுச்செயலாளா் அந்தியூா் செல்வராஜ் மற்றும் திமுக நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

இதையடுத்து முதல்வா் மு.க.ஸ்டாலின், ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள சக்தி சுகா்ஸ் விருந்தினா் மாளிகைக்கு சென்று இரவு ஓய்வெடுத்தாா்.