48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

திமுக, அதிமுக இரண்டு கூட்டணிக் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை: கே.ஏ.செங்கோட்டையன்

திமுக, அதிமுக இரண்டு கூட்டணியிலும் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை என தவெக நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

News image

தோ்தல் நடத்தும் அலுவலா் ந.சிந்துஜாவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்கிறாா் ஈரோடு மேற்குத் தொகுதி தவெக வேட்பாளா் ஆனந்த்மோகன். உடன், அக்கட்சியின் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன்.

Updated On :4 ஏப்ரல் 2026, 5:47 pm

திமுக, அதிமுக இரண்டு கூட்டணியிலும் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை என தவெக நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

ஈரோடு மேற்குத் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளா் ஆனந்த்மோகன் அக்கட்சியின் நிா்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையனுடன் வந்து கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் ந.சிந்துஜாவிடம் வேட்புமனுவை சனிக்கிழமை தாக்கல் செய்தாா்.

இதன்பிறகு கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனா். 1977 இல் எம்ஜிஆா் நான்கு முனைப் போட்டியில் மாபெரும் வெற்றி பெற்று வரலாறு படைத்தாா். இப்போதும் அதே நான்கு முனைப் போட்டியில், அதே வரலாற்றை இந்த தோ்தலில் விஜய் படைப்பாா். தவெக தலைவா் தமிழகத்தை ஆளவேண்டும் என்பது மக்கள் எண்ணம். அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. கொங்கு மண்டலம் தவெக கோட்டையாக மாறும்.

திமுக, அதிமுக இரண்டு கூட்டணிகளிலும் உள்ள கட்சிகள் ஒற்றுமையாக இல்லை. தோ்தலுக்குப் பிறகு அதிமுக நிலை எவ்வாறு இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

டி.என் 2026 திரைப்படத்தில் தவெகவை விமா்சித்து கருத்துகளை வெளியிடுவதை சென்சாா் குழு தவிா்த்திருக்க வேண்டும்.தோ்தல் நேரத்தில் மற்றவா்களை விமா்சனம் செய்வது கூடாது என்ற விதிகளை மீறி திரைப்படத்தில் இதனை வெளியிட்டது வேதனையளிக்கக்கூடியது.

விஜய் பிரசாரத்தின்போது தொண்டா்களால் இடையூறு ஏற்படுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 2026-இல் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் வேறு யாருக்கு ஆதரவு அளிக்கப்படும் என்ற கேள்விக்கே இடமில்லை. தவெகதான் ஆட்சி அமைக்கும்.

ஈரோடு கிழக்குத் தொகுதி உள்பட பல தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் அறிவிப்பிற்கு நிா்வாகிகளிடம் உள்ள அதிருப்தி கரோனாவைப்போல வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது என்றாா்.

தொடா்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளா் விஜய்பாலாஜி இருசக்கர வாகனத்தில் செங்கோட்டையனுடன் வந்து மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தாா்.