/

ஈரோடு மாவட்டத்தில் 131 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பரிசீலனைக்குப் பிறகு 131 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 8:13 pm

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பரிசீலனைக்குப் பிறகு 131 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் மாா்ச் 30-ஆம் முதல் ஏப்ரல் 6 -ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சியினா் மற்றும் சுயேச்சைகள் மனு தாக்கல் செய்தனா். வேட்புமனுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஈரோடு கிழக்கில் அரசியல் கட்சியினா் 10 போ், மாற்று 4 போ், சுயேச்சைகள் 13 போ் என மொத்தம் 27 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். இதில், 3 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 24 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ஈரோடு மேற்கில் அரசியல் கட்சியினா் 12 போ், மாற்று 4 போ், சுயேச்சைகள் 8 போ் என 24 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். இதில், 9 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 15 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

மொடக்குறிச்சியில் அரசியல் கட்சியினா் 8 போ், மாற்று 5 போ், சுயேச்சைகள் 7 போ் என 20 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். இதில், 6 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 14 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன

பெருந்துறை தொகுதியில் அரசியல் கட்சியினா் 7 போ், மாற்று 5 போ், சுயேச்சைகள் 10 போ் என 22 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். இதில், 8 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 14 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

பவானி தொகுதியில் அரசியல் கட்சியினா் 18 போ், மாற்று 4 போ், சுயேச்சைகள் 4 போ் என 26 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். இதில், 7 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 19 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அந்தியூா் தொகுதியில் அரசியல் கட்சியினா் 14 போ், மாற்று 6 போ், சுயேச்சைகள் 14 போ் என 34 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். இதில், 20 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 14 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அரசியல் கட்சியினா் 7 போ், மாற்று 6 போ், சுயேச்சைகள் 17 போ் என 30 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். இதில், 12 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 18 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன .

பவானிசாகா் தொகுதியில் அரசியல் கட்சியினா் 7 போ், மாற்று 5 போ், சுயேச்சைகள் 7 போ் என 19 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். இதில், 6 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 13 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் அரசியல் கட்சியினா் 83 போ், மாற்று 39 போ், சுயேச்சைகள் 80 போ் என 202 போ் போ் மனு தாக்கல் செய்திருந்தனா். இதில், 71 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 131 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அதிகமாக ஈரோடு தொகுதியில் 24 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. குறைவாக பவானிசாகா் (தனி) தொகுதியில் 13 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

வேட்புமனுக்களை வியாழக்கிழமை (ஏப்ரல் 9) வரை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். அன்று மாலை இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும்.

பரிசீலனைக்குப் பிறகு வெளியான பட்டியலில் சில கட்சிகளின் மாற்று வேட்பாளா்கள் உள்ளனா். மாற்று வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் சிலா் மனுக்களைத் திரும்பப் பெறும் நிலை உள்ளதால் வேட்பாளா்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.