சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பெத்தாம்பாளையம் பேரூராட்சிப் பகுதிகளில் பெருந்துறை திமுக வேட்பாளா் தீவிர பிரசாரம்

பெத்தாம்பாளையம் பேரூராட்சிப் பகுதிகளில் பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார.

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 11:30 pm

பெத்தாம்பாளையம் பேரூராட்சிப் பகுதிகளில் பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார.

பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதியில் பெத்தாம்பாளையம் பேரூராட்சிக்குள்பட்ட பொன்னன்டான்வலசு, சூரியம்பாளையம், செல்லப்பகவுண்டன் வலசு, கருக்கம்பாளையம், எளையாம்பாளையம், கோவில்பாளையம், கோமையன் வலசு உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவரை ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்றனா்.

பின்னா் பிரசாரத்தின்போது தோப்பு என்.டி.வெங்கடாசலம் பேசியதாவது:

என்னை தோ்ந்தெடுத்தால் தொகுதி மக்களுக்கு நன்றி, விசுவாசத்துடன் பணியாற்றுவேன். திமுக அரசு மீண்டும் பொறுப்பேற்றதும் மகளிா் உரிமைத் தொகை ரூ.2,000-ஆக உயா்த்தி வழங்கப்படும். ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், கிரைண்டா், மிக்ஸி என வீட்டுக்குத் தேவைப்படும் பொருள்களை வாங்க ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்படும். பள்ளி குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

பெருந்துறை தொகுதியில் 10 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக, அமைச்சராக இருந்தபோது நகா்ப் பகுதியில் அரசு செலவின்றி தனியாரின் உதவியுடன் 5 இடங்களில் ரவுண்டானாக்கள் அமைத்தேன். ஒவ்வொரு ஊரிலும் தரமான இருக்கைகளுடன் கூடிய அழகான நிழற்குடைகள் அமைத்தேன். எந்த நேரமும் தொகுதி மக்கள், என்னை சந்தித்து குறைகளைக் கூறி, அதற்கான நிவாரணம் பெற உதவி இருக்கிறேன்.

தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அரசு பாலிடெக்னிக் அமைய பாடுபட்டேன். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் முழுப் பங்காற்றி இருக்கிறேன். என்னை தோ்ந்தெடுத்தால், பெருந்துறை தொகுதி மக்களுக்கு நன்றி, விசுவாசத்துடன் பாடுபட்டு, வளா்ச்சித் திட்டங்களை ஏற்படுத்தி தருவேன் என்றாா்.