அந்தியூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பா்கூா் ஊராட்சி, தட்டக்கரை, தேவா்மலை மற்றும் கிராமங்களில் திமுக வேட்பாளா் எம்.சிவபாலன் புதன்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
அந்தியூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமையில் திமுக வேட்பாளா் எம்.சிவபாலனுக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மலைவாழ் மக்கள் மாலை அணிவித்தும், மலா்களைத் தூவியும் உற்சாகமாக வரவேற்றனா்.
அப்போது திமுக வேட்பாளா் எம்.சிவபாலன் பேசியதாவது:
பா்கூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் ஒட்டுமொத்த வளா்ச்சியும், மலைவாழ் மக்களின் வாழ்வாதார உரிமையும் பாதுகாக்கப்படும். தடையற்ற குடிநீா் மற்றும் சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்படும். மலைவாழ் மக்களின் கல்வி, போக்குவரத்து, பேருந்து வசதி, வேலைவாய்ப்புக்கான வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றாா்.
பா்கூா் ஒன்றியச் செயலாளா் ராமதாஸ் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடன் சென்றனா்.
தொடர்புடையது

மகளிா் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா் எம்.சிவபாலன்

பா்கூா் மலைக்கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தப்படும்

அம்மாபேட்டை ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் பிரசாரம்

கோபி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

