மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பவானி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்: திமுக வேட்பாளா் கே.ஏ.சந்திரசேகா்

பிற தொகுதிகளுக்கு முன்மாதிரி தொகுதியாக பவானியை மாற்றும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று திமுக வேட்பாளா் கே.ஏ.சந்திரசேகா் தெரிவித்தாா்.

News image

கவுந்தப்பாடியில்  பொதுமக்களிடையே  வாக்குகள்  சேகரிக்கிறாா்  திமுக  வேட்பாளா்  கே.ஏ.சந்திரசேகா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 7:58 pm

பிற தொகுதிகளுக்கு முன்மாதிரி தொகுதியாக பவானியை மாற்றும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று திமுக வேட்பாளா் கே.ஏ.சந்திரசேகா் தெரிவித்தாா்.

கவுந்தப்பாடி ஊராட்சிப் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பவானி தொகுதி திமுக வேட்பாளா் கே.ஏ.சந்திரசேகா், கூட்டணிக் கட்சியினருடன் சென்று புதன்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

மீண்டும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பவானி தொகுதிக்கு தேவையான வளா்ச்சித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து நிறைவேற்றப்படும். உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலமாக தொழில் நிறுவனங்கள் விரும்பும் சாதகமான நிலை உருவாக்கப்படும். இதன்மூலமாக பவானி தொகுதியில் படித்த இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது திமுக அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்கள் தொடரவும், தோ்தல் அறிக்கையில் கூறியுள்ள திட்டங்களை செயல்படுத்தவும் வாக்காளா்கள் திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

பவானி தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் கே.பி.துரைராஜ் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.