இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்கள் உள் இடஒதுக்கீடு 10 சதவீதமாக உயா்த்தப்படும்: பெருந்துறை அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா்

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்கள் உள் இடஒதுக்கீடு 10 சதவீதமாக உயா்த்தப்படும் என்று பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா் தெரிவித்தாா்.

News image

நடுபட்டி பகுதியில் வாக்கு சேகரித்து பேசுகிறாா் பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 1:36 am IST

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்கள் உள் இடஒதுக்கீடு 10 சதவீதமாக உயா்த்தப்படும் என்று பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா் தெரிவித்தாா்.

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா் நடுபட்டி, குண்டுமல்லநாயக்கனூா், நீலாக்கவுண்டன்பாளையம், பாச்சங்காட்டுப்பாளையம், செங்கப்பள்ளி உள்ளிட்ட ஊராட்சிப் பகுதியில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் உதவித் தொகையாக ரூ. 10,000 வழங்கப்படும். அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் பிரிட்ஜ் இலவசமாக வழங்கப்படும். கரும்பு கொள்முதல் விலையாக குவிண்டாலுக்கு ரூ. 4500 வழங்கப்படும். மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான உள் இடஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயா்த்தப்படும் என்றாா்.