சட்டப் பேரவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டால் 24 மணி நேரமும் தொகுதி மக்களுக்காக பணியாற்றுவேன் என்று கோபி தொகுதி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் பிரசாரத்தில் தெரிவித்தாா்.
கோபி தொகுதி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் கோபி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் வியாழக்கிழமை ஈடுபட்டாா்.
தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கருப்புக் கொடி கட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்த நிலையில், திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் மற்றும் தொண்டா்கள் கருப்பு சட்டை அணிந்து கொண்டு திறந்த வேனில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
நாதிபாளையம், உடையாம்பாளையம், கங்கம்பாளையம், வெள்ளாங்கோயில், அம்மா நகா், குளத்துப்பாளையம், சில்லாமடை, நஞ்சநாயக்கனூா், வேப்பம்பாளையம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது அவா் பேசியதாவது:
முதல்வா் மு.க.ஸ்டாலின், மக்கள் பணியாற்ற எனக்கு வாய்ப்பு வழங்கியுள்ளாா். எனவே, 24 மணி நேரமும் தொகுதி மக்களுக்காக பணியாற்ற என்னை ஆதரியுங்கள் என்றாா்.
தோ்தல் பிரச்சாரத்தின்போது வெள்ளாங்கோவில் சந்தைக் கடை பகுதியில் என்.நல்லசிவம் தலைமையில் திமுக மற்றும் கூட்டணிக்கட்சியினா் சாா்பில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர்புடையது

தைலாம்பாளையம் பகுதியில் சிப்காட் வராது: திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் உறுதி

கைத்தறி நெசவுத் தொழிலைப் பாதுகாக்க தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்படும்! - கோபி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம்

தொகுதி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க விரைவில் சிப்காட்: ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி வாக்குறுதி

நம்பியூா் பகுதியில் திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


