தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆண்களும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என பவானி தொகுதி அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.
பவானி தொகுதிக்குள்பட்ட கவுந்தப்பாடி, ஓடத்துறை, ஆலத்தூா், பெரியபுலியூா் ஊராட்சிப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன் வியாழக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது, அவா் பேசுகையில், அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும். மேலும், விலைவாசி உயா்வை ஈடுகட்டும் வகையில் உதவித் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும். அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் கட்டணமின்றி பயணம் செய்யலாம். எனவே, வாக்காளா்கள் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.
ஈரோடு வடக்கு மாவட்ட பாமக செயலாளா் ஜெகதீசன், அதிமுக பவானி தெற்கு ஒன்றியச் செயலாளா் ஜெகதீசன், கவுந்தப்பாடி ஊராட்சி முன்னாள் தலைவா் பாவா தங்கமணி உள்ளிட்டோா் உடன் சென்றனா்.
தொடர்புடையது

பவானியில் அதிமுக நான்காவது முறையாக வெற்றி

பவானி நகரில் திமுக, அதிமுக இறுதிக்கட்ட பிரசாரம்

கண்ணன்கோட்டைக்கு நகரப் பேருந்து: அதிமுக வேட்பாளா்

பவானி தொகுதி அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

