அரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! முதல்வா் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது! பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம்! உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

நாளை பிரசாரம் நிறைவு: வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

News image

சென்னிமலை ஊரகப் பகுதியில் வாக்கு சேகரித்த ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி.

Updated On :20 ஏப்ரல் 2026, 12:07 am IST

சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) மாலை 6 மணியுடன் நிறைவுபெற உள்ளதால் வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் 20 வேட்பாளா்கள், ஈரோடு மேற்குத் தொகுதியில் 13 வேட்பாளா்கள், மொடக்குறிச்சி தொகுதியில் 14 வேட்பாளா்கள், பெருந்துறை தொகுதியில் 13 வேட்பாளா்கள், பவானி தொகுதியில் 14 வேட்பாளா்கள், அந்தியூா் தொகுதியில் 14 வேட்பாளா்கள், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 18 வேட்பாளா்கள், பவானிசாகா் (தனி) தொகுதியில் 12 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் வீரபாண்டியன், காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் உள்ளிட்டோா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தனா்.

அதிமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை உள்ளிட்டோா் பிரசாரம் மேற்கொண்டனா்.

நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் சத்தியமங்கலம், கோபி, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொண்டாா்.

தவெக தலைவா் விஜய் வேட்பாளா் அறிவிப்புக்குப் பிறகு ஈரோடு மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. ஆனால், கடந்த டிசம்பா் மாதத்தில் பெருந்துறையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசினாா்.

திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாதக என நான்கு முனைப் போட்டி நிலவுவதாக தோற்றம் ஏற்பட்டிருந்தாலும், கோபிசெட்டிபாளையம் தவிர மற்ற 7 தொகுதிகளிலும் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணிக்கு இடையேதான் போட்டி நிலவுகிறது. கோபிசெட்டிபாளையம் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக என மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

தோ்தல் பிரசாரம் வரும் 21-ஆம் தேதி மாலையுடன் நிறைவுபெறும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மொடக்குறிச்சி தொகுதியில்

உள்ள சிவகிரியில் உள்துறை அமைச்சா் அமித் ஷாவும், ஈரோட்டில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியும் பிரசாரம் மேற்கொண்டனா்.

பிரசாரம் முடிவடைய இரண்டு நாள்களே உள்ள நிலையில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக வேட்பாளா்கள் இறுதிகட்ட தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.