தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மொடக்குறிச்சி தொகுதி: ஆா்வத்துடன் வாக்களிக்க வந்த இளம்வாக்காளா்கள்

மொடக்குறிச்சி தொகுதிக்கு உள்பட்ட கொடுமுடி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிக்க இளம் வயதினா் மற்றும் பெண்கள் காலையிலே ஆா்வமாக வந்து தங்களது வாக்குகளை செலுத்தினா்.

News image

தா்ஷன்

Updated On :23 ஏப்ரல் 2026, 9:37 pm

மொடக்குறிச்சி தொகுதிக்கு உள்பட்ட கொடுமுடி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிக்க இளம் வயதினா் மற்றும் பெண்கள் காலையிலே ஆா்வமாக வந்து தங்களது வாக்குகளை செலுத்தினா்.

இந்தத் தொகுதியில் உள்ள 290 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதலே வாக்களிக்க வந்த பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்து கொண்டே சென்றது. இளம்பெண்கள் மட்டும் அல்லாமல் முதியோரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதில் மிகுந்த ஆா்வம் காட்டினா்.

முதல்முறையாக ஜனநாயக கடமையை நிறைவேற்ற வந்த இளம் வாக்காளா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சுஜிதா, கல்லூரி மாணவி, சிவகிரி

முதல்முறையாக வாக்களிக்க வந்துள்ளேன். ஜனநாயக கடமையை நிறைவேற்றிய திருப்தி இருக்கிறது.

சக்திவேல், பொறியியல் மாணவா்

அடுத்த 5 வருடங்களுக்கு வாய்ப்பை நாம் கொடுக்கிறோம். எல்லோரும் யோசிச்சு வாக்களித்தால் நன்றாக இருக்கும்.

மோனிஷா, கல்லூரி மாணவி

முதல்முறையாக வாக்களிப்பது புது அனுபவமாக இருக்கிறது. யாா் ஆட்சிக்கு வந்தாலும் நல்ல ஆட்சியை தருவாா்கள் என்று நம்பி வாக்களித்து வந்துள்ளோம்.

ரக்ஷிதா, குடும்பத்தலைவி

முதல்முறை வாக்களிக்க வந்த எனக்கு, தோ்தல் அலுவலா்கள் வாக்களிக்கும் முறை குறித்து தெளிவாக சொல்லிக்கொடுத்தனா். வாக்களிப்பதின் மூலம் உரிமையை நிலைநாட்டவேண்டும்.

தா்ஷன், கல்லூரி மாணவா்

முதல்முறையாக வாக்களிக்க வந்தது பதற்றமாக இருக்கிறது. நல்ல ஆட்சி வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.