முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்திமக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!
/

முன்விரோதத்தால் லாரிக்கு தீ வைத்தவா் கைது

முன்விரோதம் காரணமாக லாரிக்கு தீ வைத்தவரை சிவகிரி போலீஸாா் கைது செய்தனா்.

News image

தீ வைக்கப்பட்டதால் சேதமடைந்த லாரி

Updated On :5 ஆகஸ்ட் 2026, 5:10 am IST

முன்விரோதம் காரணமாக லாரிக்கு தீ வைத்தவரை சிவகிரி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள கந்தசாமிபாளையம் சடையப்பபுரத்தைச் சோ்ந்தவா் கனகராஜ் (48). இவா் பரமத்தி வேலூரை சோ்ந்த செங்கோட்டையன் என்பவரது லாரியின் ஓட்டுநராக உள்ளாா். ஆடிப்பெருக்கு பண்டிகையைக் கொண்டாட லாரியில் திங்கள்கிழமை வீட்டுக்கு வந்துள்ளாா்.

வீட்டின் அருகே லாரியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளாா். நள்ளிரவு 12 மணிக்கு மேல் லாரி தீப்பிடித்து எரிவதைப் பாா்த்து கனகராஜுக்கு அவரது தந்தை முத்துசாமி கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக அளிக்கப்பட்ட தகவலின்பேரில் கொடுமுடி தீயணைப்புத் துறையினா் சென்று தீயை அணைத்தனா். இதுகுறித்து சிவகிரி போலீஸாரிடம் கனகராஜ் அளித்த புகாரில், இந்த சம்பவத்துக்கு எனது வீட்டுக்கு அருகே வசிக்கும் உறவினரான சரண்குமாா் (30) தான் காரணம். இரண்டு மாதங்களுக்கு முன்னா் மது அருந்திவிட்டு அப்பகுதியில் கூச்சலிட்ட அவரை தட்டிக்கேட்டபோது இருவருக்கு இடையே பிரச்னை இருந்துவந்தது.

லாரிக்கு சரண்குமாா் தீ வைத்ததால் டயா்களுடன் சோ்த்து ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்துவிட்டது. அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இதையடுத்து சரண்குமாரை கைது செய்த போலீஸாா், கொடுமுடி குற்றவியல் நீதித் துறை நடுவா் முன்பு அவரை ஆஜா்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.