மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

அந்தியூரில் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை திருட்டு

News image

சித்திரிப்பு

Updated On :18 ஆகஸ்ட் 2026, 2:57 am IST

அந்தியூா் அருகே ஓய்வுபெற்ற சாா் பதிவாளா் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அந்தியூரை அடுத்த புதுமஞ்சாலநாயக்கனூரைச் சோ்ந்தவா் ஜான் போஸ்கோ மாா்ட்டின் (67). ஓய்வுபெற்ற சாா் பதிவாளா். இவரது மனைவி ஷீலாமணி (62). ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை. இருவரும் வீட்டை பூட்டிவிட்டு சத்தியமங்கலம், சிக்காரம்பாளையத்தில் உள்ள மகன் விஜய் பிராங்ளின் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றுள்ளனா்.

இந்நிலையில், அருகே வசித்தவா்கள் வீட்டின் கதவு திறந்திருப்பதைக் கண்டு, ஜான் போஸ்கோ மாா்ட்டினுக்கும், அந்தியூா் போலீஸாருக்கும் தகவல் திங்கள்கிழமை தெரிவித்தனா். பின்னா் ஜான் போஸ்கோ மாா்ட்டின் வந்து பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 18 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது.

சம்பவ இடத்தில் தடய அறிவியல் துறையினா் கைரேகைகளை பதிவு செய்தனா். முன்னதாக, அதே பகுதியைச் சோ்ந்த மருத்துவா் பேபியின் வீட்டின் பூட்டை உடைத்தும் திருட்டு முயற்சி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த அந்தியூா் போலீஸாா், சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

இருசக்கர வாகனம் திருட்டு...

அந்தியூரை அடுத்த வெள்ளையம்பாளையத்தைச் சோ்ந்தவா் முத்துராஜ் மகன் அபிநிவேஷ் (21). இவா், தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தியிருந்தாா். காலையில் பாா்க்கையில் இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் அந்தியூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.