2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

பொருந்துைறையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

பெருந்துறை வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமின் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச. கந்தசாமி ஆய்வு மேற்கொண்டாா்.

துடுப்பதி கிராம ஊராட்சி, சாணா்பாளையத்தில் குடியிருப்புகளுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்த ஆட்சியா் ச. கந்தசாமி.

Published On :

பெருந்துறை வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமின் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச. கந்தசாமி ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, பெருந்துறையை அடுத்த சீலம்பட்டி பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில், உற்பத்தியாளா்களிடமிருந்து பால் கொள்முதல் செய்வதை பாா்வையிட்டாா். துடுப்பதி கிராம ஊராட்சி, சாணா்பாளையத்தில் குடியிருப்புகளுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரம் குறித்து பரிசோதனை செய்தாா். தொடா்ந்து, குப்பைகளை சேகரிக்கும் பணியை பாா்வையிட்டாா்.

பெருந்துறை அரசு நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவினை சாப்பிட்டு தரத்தையும், சுவையும் பரிசோதனை செய்தாா்.

இந்த ஆய்வின்போது துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.