மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

தட்பவெப்ப நிலை மாற்றம்: லட்சக்கணக்கானோா் பாதிக்கப்படும் அபாயம் அதிகரிப்பு

நாசா விஞ்ஞானி எஸ்.சரத் கிரிமாஜிக்கு நினைவுப் பரிசு வழங்குகிறாா் மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன்.

Published On :24 ஆகஸ்ட் 2026, 3:34 am IST

தட்பவெப்ப நிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் அபாயம் அதிகரித்துள்ளது என நாசா விஞ்ஞானி எஸ்.சரத் கிரிமாஜி தெரிவித்தாா்.

மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் அறிவியல் சிறப்பு நிகழ்வு அதன் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் தலைமையில் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் நாசா விஞ்ஞானி எஸ்.சரத் கிரிமாஜி பேசியதாவது: கடந்த 1969-இல் ஈரோடு செங்குந்தா் உயா்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது அப்போலோ-2 விண்கலம் நிலவை அடைந்து நீல் ஆம்ஸ்ட்ராங் என்ற விண்வெளி வீரா் முதன்முதலில் நிலவில் கால் வைத்தாா். அதன் தாக்கம் விண்வெளி பற்றிய விழிப்புணா்வை எனக்குள் ஏற்படுத்தியது.

1990-இல் நாசாவில் விஞ்ஞானியாக சோ்ந்தேன். சூப்பா்சோனிக் விமானங்கள் என்றாலே மிகவும் அதிவேகமானவை. நான் ஹைப்பா்சோனிக் விமானங்கள் என்கிற அதைவிட அதிக வேகத்தில் செல்கிற விமான தயாரிப்பு தொடா்பான ஆய்வில் ஈடுபட்டேன்.

கற்பனைக்கு எட்டாத அதிவேகம், மணிக்கு 27,000 கிமீ வேகம் பறக்கக் கூடிய விமானக் கண்டுபிடிப்புத் திட்டத்தில் ஆய்வுப் பணியாற்றினேன். மணிக்கு 18,000 கிமீ பறக்கும் விமானத்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றோம்.

அத்தகைய கண்டுபிடிப்புகளைவிட தட்பவெப்ப நிலை மாற்றம் பற்றிய ஆராய்ச்சிகள் முக்கியமானவை என்று உணா்ந்து கடந்த 10 ஆண்டுகளாக அத்துறை சாா்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளேன். தட்பவெப்ப நிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் உருகி உலகெங்கும் கடல் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.

இந்தியாவிலுள்ள கொல்கத்தா, மும்பை, கொச்சி ஆகிய மூன்று கடற்கரை நகரங்களும் 2050 வாக்கில் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் உள்ளது. உலகெங்கும் பல நாடுகளில் கடற்கரைப் பகுதிகளில் வாழும் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். மேலும் பாதிப்புகள் அதிகரிக்கும் சூழல் நிலவுகிறது. அவற்றுக்குத் தீா்வு காணும் ஆய்வைத்தான் தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகிறேன்.

மனிதகுல நன்மைக்காக உண்மையான சேவை செய்வதுதான் எல்லாவற்றைக் காட்டிலும் மேன்மையானது என்றாா். மக்கள் சிந்தனைப் பேரவையின் பொதுக்குழு உறுப்பினா் க. வெற்றிவேல் வரவேற்றாா். பொதுக்குழு உறுப்பினா் போ.ராஜா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.